10 அசீரிய ராஜாவான திகிலாத்-பிலேசரைச் சந்திக்க ஆகாஸ் ராஜா தமஸ்குவுக்குப் போனார். அங்கிருந்த பலிபீடத்தைப் பார்த்தபோது, அதன் வரைபடத்தைக் குருவாகிய ஊரியாவுக்கு அனுப்பி வைத்தார். அதன் வடிவமைப்பு, கட்டப்பட்ட விதம் போன்ற விவரங்களை அதில் குறிப்பிட்டிருந்தார்.+