28 இயேசு இந்த விஷயங்களைச் சொல்லி முடித்தபோது, அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள்.+29 ஏனென்றால், அவர்களுடைய வேத அறிஞர்களைப் போல் கற்பிக்காமல், கடவுளிடமிருந்து அதிகாரம் பெற்றவராக அவர் கற்பித்தார்.+
42 நியாயத்தீர்ப்பின்போது தென்தேசத்து ராணி இந்தத் தலைமுறையினரோடு எழுந்துவந்து இவர்களைக் கண்டனம் செய்வாள்; ஏனென்றால், அவள் சாலொமோனின் ஞானத்தைக் கேட்க பூமியின் தொலைதூரப் பகுதியிலிருந்து வந்தாள்;+ ஆனால், இதோ! சாலொமோனைவிட பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார்.+