-
உபாகமம் 13:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 பின்பு அவர், “உங்கள் நடுவிலிருக்கும் ஒரு தீர்க்கதரிசியோ, கனவுகளைப் பார்த்து எதிர்காலத்தைச் சொல்கிறவனோ உங்களுக்கு ஒரு அடையாளத்தை அல்லது அற்புதத்தைக் காட்டுவதாகச் சொல்லலாம். 2 அந்த அடையாளமோ அற்புதமோ நடக்கலாம். உங்களுக்குத் தெரியாத ‘வேறு தெய்வங்களைத் தேடிப்போய் அவற்றை வணங்குவோம், வாருங்கள்’ என்று அவன் உங்களிடம் சொல்லலாம். 3 ஆனால், அந்தத் தீர்க்கதரிசியோ கனவு காண்கிறவனோ சொல்வதை நீங்கள் கேட்கக் கூடாது.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அன்பு காட்டுகிறீர்களா+ என்று உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைச் சோதித்துப் பார்க்கிறார்.+
-