27 அதோடு, இஸ்ரவேலர்களைப் பற்றி ஏசாயா, “இஸ்ரவேல் ஜனங்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப் போல் இருந்தாலும், மீதியாக இருப்பவர்களே காப்பாற்றப்படுவார்கள்.+ 28 ஏனென்றால், இந்தப் பூமியில் வாழும் மக்களிடம் யெகோவா கணக்குக் கேட்பார், அதைச் சீக்கிரமாகச் செய்து முடிப்பார்”+ என்று சொன்னார்.