12 யூதாவின் ராஜாவான யோயாக்கீன் தன்னுடைய அம்மாவையும் ஊழியர்களையும் உயர் அதிகாரிகளையும்* அரண்மனை அதிகாரிகளையும்+ கூட்டிக்கொண்டு பாபிலோன் ராஜாவிடம் போனார்.+ பாபிலோன் ராஜா தான் ஆட்சி செய்த எட்டாம் வருஷத்தில் அவரைக் கைதியாகப் பிடித்துக்கொண்டு போனான்.+
14 எருசலேமில் இருந்த உயர் அதிகாரிகள்,+ மாவீரர்கள், கைத்தொழிலாளிகள், கொல்லர்கள்*+ என எல்லாரையும் சிறைபிடித்துக்கொண்டு போனான்; மொத்தம் 10,000 பேரைக் கொண்டுபோனான். பரம ஏழைகளைத் தவிர வேறு யாரையுமே நகரத்தில் விட்டுவைக்கவில்லை.+
11 நகரத்தில் மிச்சமிருந்த மக்களையும், பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும், மற்ற மக்களையும் காவலாளிகளின் தலைவன் நேபுசராதான் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+