-
2 நாளாகமம் 19:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அவர்களிடம், “உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கு உண்மையாகச் செய்ய வேண்டும், முழு இதயத்தோடு செய்ய வேண்டும். 10 மற்ற நகரங்களில் இருக்கிற உங்கள் சகோதரர்கள் கொலை வழக்குகளை உங்களிடம் கொண்டுவரலாம்,+ அல்லது ஒரு சட்டத்தையோ கட்டளையையோ விதிமுறைகளையோ நீதித்தீர்ப்புகளையோ பற்றி விளக்கம் கேட்டு வரலாம். அவர்கள் யெகோவாவுக்கு முன்னால் குற்றமுள்ளவர்களாக ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களை நீங்கள் எச்சரிக்க வேண்டும். இல்லாவிட்டால், நீங்களும் அவர்களும் கடவுளுடைய கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். உங்கள்மீது பழி வராமல் இருக்க வேண்டுமென்றால் நான் சொன்னபடி செய்யுங்கள்.
-