31 அறுவடைக்குத் தயாராக இருந்த பார்லி பயிரும் அரும்புவிட்டிருந்த ஆளிவிதைச் செடியும்* ஆலங்கட்டி மழையில் நாசமாயின. 32 கோதுமையும் மாக்கோதுமையும்* கொஞ்சக் காலம் கழித்துதான் கதிர்விடும் என்பதால், அவை இரண்டும் சேதமாகவில்லை.
9 நீ கோதுமையையும், பார்லியையும், மொச்சையையும், பருப்புகளையும், தினையையும், மாக்கோதுமையையும்* எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து உனக்காக ரொட்டி சுட்டுக்கொள். நீ இடது பக்கமாகத் திரும்பிப் படுத்திருக்கும் 390 நாட்களும் அதைச் சாப்பிட வேண்டும்.+