-
மாற்கு 7:32-35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 இங்கே,* காது கேட்காதவனும், பேச்சுக் குறைபாடு உள்ளவனுமான ஒருவனை+ அவரிடம் கொண்டுவந்து அவன்மேல் கைகளை வைக்கும்படி சிலர் கெஞ்சிக் கேட்டார்கள். 33 அப்போது அவர், கூட்டத்தாரைவிட்டு அவனைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் அவனுடைய காதுகளில் தன் விரல்களை வைத்து, உமிழ்ந்து, பின்பு அவனுடைய நாக்கைத் தொட்டார்.+ 34 அதன் பின்பு, வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சுவிட்டு, “எப்பத்தா” என்று சொன்னார்; அதற்கு “திறக்கப்படு” என்று அர்த்தம். 35 அப்போது அவனுடைய காதுகள் திறந்தன,+ அவனுடைய பேச்சுக் குறைபாடும் சரியாகி அவன் தெளிவாகப் பேச ஆரம்பித்தான்.
-
-
லூக்கா 7:22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 அதன் பின்பு அவர் அந்தச் சீஷர்களிடம், “நீங்கள் பார்த்ததையும் கேட்டதையும் யோவானிடம் போய்ச் சொல்லுங்கள்: பார்வை இல்லாதவர்கள் பார்க்கிறார்கள்,+ நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள், தொழுநோயாளிகள் சுத்தமாகிறார்கள், காது கேட்காதவர்கள் கேட்கிறார்கள்,+ இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நல்ல செய்தி சொல்லப்படுகிறது.+
-