-
2 ராஜாக்கள் 19:1-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 எசேக்கியா ராஜா அதைக் கேட்டவுடனே தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டார். பின்பு, துக்கத் துணியை* போட்டுக்கொண்டு யெகோவாவின் ஆலயத்துக்குப் போனார்.+ 2 அதன்பின், அரண்மனை நிர்வாகியான எலியாக்கீமையும் செயலாளரான செப்னாவையும் மூத்த குருமார்களையும் ஆமோத்சின் மகனாகிய ஏசாயா தீர்க்கதரிசியிடம்+ அனுப்பினார். அவர்கள் துக்கத் துணியைப் போட்டுக்கொண்டு ஏசாயாவிடம் போய், 3 “‘இந்த நாள் நமக்கு இக்கட்டான நாள். இன்று நாம் அவமதிக்கப்பட்டோம்,* கேவலப்படுத்தப்பட்டோம். பிரசவ நேரம் நெருங்கியும் பிள்ளை பெற்றெடுக்கச் சக்தியில்லாத பெண்ணைப் போல ஆகிவிட்டோம்.+ 4 அசீரிய ராஜா தன்னுடைய ஊழியன் ரப்சாக்கேயை அனுப்பி, உயிருள்ள கடவுளைப் பழித்துப் பேசியிருக்கிறான்;+ அவன் பேசிய பேச்சையெல்லாம் உங்கள் கடவுளான யெகோவா கேட்டிருப்பார். அவனுக்கு யெகோவா தக்க தண்டனை தருவார். அதனால், இப்போது தேசத்தில் மீதியிருக்கிற மக்களுக்காக அவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள்’+ என்று எசேக்கியா உங்களிடம் சொல்லச் சொன்னார்” என்றார்கள்.
-