-
யோசுவா 10:29, 30பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 பின்பு யோசுவாவும் இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் மக்கெதாவிலிருந்து லிப்னாவுக்குப்+ போய் அதை எதிர்த்துப் போர் செய்தார்கள். 30 அந்த நகரத்தையும் அதன் ராஜாவையும் இஸ்ரவேலர்களின் கையில் யெகோவா கொடுத்தார்.+ அவர்கள் அதைத் தாக்கி, அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல் வாளால் கொன்றுபோட்டார்கள். எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததைப் போலவே+ லிப்னாவின் ராஜாவுக்கும் செய்தார்கள்.
-
-
2 ராஜாக்கள் 19:8-13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 அசீரிய ராஜா லாகீசிலிருந்து போய்விட்டதை ரப்சாக்கே கேள்விப்பட்டு,+ அவரிடம் திரும்பிப் போனான். அப்போது, அசீரிய ராஜா லிப்னாவுக்கு எதிராகப் போர் செய்துகொண்டிருந்தான்.+ 9 அந்தச் சமயத்தில், “எத்தியோப்பிய ராஜாவான திராக்கா உங்களோடு போர் செய்ய வந்திருக்கிறார்” என்று அசீரிய ராஜாவிடம் சொல்லப்பட்டது. அதனால், அவன் மறுபடியும் எசேக்கியாவிடம் தூதுவர்களை அனுப்பினான்.+ 10 அந்தத் தூதுவர்களிடம், “நீங்கள் யூதாவின் ராஜா எசேக்கியாவிடம் போய் இப்படிச் சொல்லுங்கள்: ‘“எருசலேமை அசீரிய ராஜாவின் கையில் கொடுக்கப்போவதில்லை”+ என்று நீ நம்புகிற கடவுள் சொன்னால் அதைக் கேட்டு ஏமாந்துவிடாதே. 11 இதோ பார்! அசீரிய ராஜாக்கள் மற்ற எல்லா தேசங்களையும் அடியோடு அழித்துப்போட்டதை நீ கேள்விப்படவில்லையா?+ நீ மட்டும் என் கையிலிருந்து தப்பித்துவிடுவாயா? 12 என்னுடைய முன்னோர்கள் மற்ற தேசங்களை அழித்தபோது அங்கிருந்த தெய்வங்களால் காப்பாற்ற முடிந்ததா? கோசான் மக்களும் ஆரான்+ மக்களும் ரேத்சேப் மக்களும் தெல்-ஆசாரில் குடியிருந்த ஏதேன் மக்களும் எங்கே? 13 காமாத்தின் ராஜாவும் அர்பாத்தின் ராஜாவும் எங்கே? செப்பர்வாயிம், ஏனா, ஈவா+ நகரங்களின் ராஜாக்களெல்லாம் இப்போது எங்கே?’” என்று கேட்டான்.
-