23 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா இப்படிச் சொல்கிறார்: “சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் திரும்பவும் யூதாவுக்கும் அதன் நகரங்களுக்கும் கூட்டிக்கொண்டு வரும்போது அவர்கள், ‘நீதி குடியிருக்கும் பரிசுத்த மலையே,+ யெகோவா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்று மறுபடியும் சொல்வார்கள்.