22 பின்பு ஆசா ராஜா, யூதாவிலிருந்த அத்தனை பேரையும், ஒருவர் விடாமல் எல்லாரையும், வரச் சொல்லிக் கட்டளையிட்டார். ராமா நகரத்தைக் கட்டுவதற்கு பாஷா பயன்படுத்திய கற்களையும் மரங்களையும் அவர்கள் அங்கிருந்து கொண்டுவந்தார்கள். அவற்றை வைத்து பென்யமீன் பகுதியில் கெபாவையும்+ மிஸ்பாவையும்+ ஆசா கட்டினார்.