2 இனி யாரும் மோவாபைப் புகழ மாட்டார்கள்.
அவளைக் கவிழ்ப்பதற்காக எதிரிகள் எஸ்போனில்+ திட்டம் தீட்டியிருக்கிறார்கள்:
‘அந்தத் தேசத்துக்கு ஒரு முடிவுகட்டலாம், வாருங்கள்’ என்று சொல்கிறார்கள்.
மத்மேனே, நீயும் அமைதியாகிவிடு!
ஏனென்றால், வாள் உன்னைக் குறிவைத்திருக்கிறது.
3 ஒரோனாயீமுக்குப்+ பேரழிவு வந்துவிட்டது!
அதனால், அங்கே அலறல் சத்தம் கேட்கிறது.