35 ‘என்னையும் என் உடலையும் கொடுமைப்படுத்திய பழியை பாபிலோன் சுமக்கட்டும்’ என்று சீயோன் சொல்கிறாள்.+
‘என்னுடைய இரத்தத்தைச் சிந்திய பழியை கல்தேயர்கள் சுமக்கட்டும்’ என்று எருசலேம் சொல்கிறாள்.”
36 அதனால் யெகோவா சொல்வது இதுதான்:
“இதோ, நான் உனக்காக வழக்காடுகிறேன்.+
நான் உனக்காகப் பழிவாங்குவேன்.+
அவளுடைய கடலையும் கிணறுகளையும் வற்றிப்போக வைப்பேன்.+