-
எரேமியா 11:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப் போல நான் இருந்தேன்.
அவர்கள் என்னைத் தீர்த்துக்கட்ட சதி செய்து,
“மரத்தைப் பழங்களோடு சேர்த்து வெட்டிப்போடலாம்,
இந்த உலகத்திலிருந்தே அவனை ஒழித்துக்கட்டலாம்,
அவனுடைய பேர்கூட அழிந்துபோகட்டும்” என்று பேசி வைத்திருந்தது எனக்குத் தெரியவில்லை.+
20 பரலோகப் படைகளின் யெகோவாவே, நீங்கள் நீதியான தீர்ப்பைக் கொடுக்கிறவர்.
என்னுடைய வழக்கை உங்களிடமே ஒப்படைத்துவிட்டேன்.
என்னை எதிர்க்கிறவர்களை நீங்கள் பழிவாங்குவதை என் கண்ணாலேயே பார்க்க வையுங்கள்.
-