7 பிற்பாடு, வனாந்தரத்திலுள்ள நீரூற்றுக்குப் பக்கத்தில், அதாவது ஷூருக்குப்+ போகும் வழியிலுள்ள நீரூற்றுக்குப் பக்கத்தில், யெகோவாவின் தூதர் அவளைச் சந்தித்தார்.
13 யெகோவா இதையெல்லாம் சொன்ன பிறகு ஆகார் அவருடைய பெயரைப் புகழ்ந்து, “நீங்கள் எல்லாவற்றையும் பார்க்கிற கடவுள்.+ என்னைப் பார்ப்பவரை நானும் பார்த்துவிட்டேனே!” என்று சொன்னாள்.
13 எந்தப் படைப்பும் அவருடைய பார்வைக்கு மறைவாக இல்லை;+ எல்லாமே அவருடைய கண்களுக்கு முன்னால் ஒளிவுமறைவில்லாமல் வெட்டவெளிச்சமாக இருக்கிறது. அவருக்குத்தான் நாம் கணக்குக் கொடுக்க வேண்டும்.+