23 பின்பு, ‘செம்புக் கடல்’ என்றழைக்கப்பட்ட பெரிய தண்ணீர்த் தொட்டியை உலோகத்தால் அவர் வார்த்தார்.+ அது வட்ட வடிவில் இருந்தது. அந்தத் தொட்டியின் ஒரு விளிம்புமுதல் மறு விளிம்புவரை அதன் விட்டம் 10 முழம், அதன் உயரம் 5 முழம், அளவுநூலால் அளந்தபோது அதன் சுற்றளவு 30 முழமாக இருந்தது.+