6 ஓசெயா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியாவை அசீரிய ராஜா கைப்பற்றினான்.+ பின்பு, இஸ்ரவேல் மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப்+ பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+
8 அதற்குப் பதிலாக, ‘இஸ்ரவேல் வம்சத்தாரை வடக்கு தேசத்திலிருந்தும் அவர்கள் துரத்தப்பட்டிருந்த மற்ற எல்லா தேசங்களிலிருந்தும் கூட்டிக்கொண்டு வந்த உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’* என்றே சொல்வார்கள். அவர்களுடைய சொந்த தேசத்திலேயே அவர்கள் வாழ்வார்கள்.”+