29 வில்வீரர்களைக்+ கூப்பிடுங்கள்.
பாபிலோனைத் தாக்கச் சொல்லுங்கள்.
அவளைச் சுற்றிவளையுங்கள்; யாரையும் தப்ப விடாதீர்கள்.
அவளுக்குச் சரியான கூலி கொடுங்கள்.+
அவள் செய்ததையே அவளுக்குத் திருப்பிச் செய்யுங்கள்.+
ஏனென்றால், அவள் யெகோவாவுக்கு எதிராக அகங்காரத்தோடு நடந்துகொண்டாள்.
இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளுக்குமுன் பெருமையடித்தாள்.+