உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 26:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 உங்கள் நகரங்களை நாசம் செய்வேன்,+ உங்கள் புனித ஸ்தலங்களைப் பாழாக்குவேன். உங்களுடைய பலிகளை ஏற்றுக்கொள்ள* மாட்டேன்.

  • எரேமியா 26:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நான் இந்த ஆலயத்தை சீலோவைப்+ போல் பாழாக்கிவிடுவேன். பூமியெங்கும் இருக்கிற ஜனங்கள் இந்த நகரத்தைப் பார்த்து சபிக்கும்படி செய்வேன்’+ என்று சொல்ல வேண்டும்.”’”

  • எரேமியா 52:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஐந்தாம் மாதம் பத்தாம் தேதியில், அதாவது பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த 19-ஆம் வருஷத்தில், நேபுசராதான் எருசலேமுக்குள் வந்தான்.+ இவன் காவலாளிகளின் தலைவன், பாபிலோன் ராஜாவின் சேவகன். 13 யெகோவாவின் ஆலயத்தையும் ராஜாவின் அரண்மனையையும் எருசலேமிலிருந்த எல்லா வீடுகளையும் அவன் தீ வைத்துக் கொளுத்தினான்.+ பெரிய மனிதர்களுடைய வீடுகளைக்கூட ஒன்றுவிடாமல் எரித்துப்போட்டான்.

  • எசேக்கியேல் 24:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 ‘இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ இப்படிச் சொல்: “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் என்னுடைய ஆலயத்தைப் பார்த்து மிகவும் பெருமைப்படுகிறீர்கள். அதன்மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருக்கிறீர்கள். ஆனால், நான் அதைத் தீட்டுப்படுத்தப்போகிறேன்.+ உங்கள் தேசத்தில் நீங்கள் விட்டுவிட்டு வந்த உங்கள் பிள்ளைகள் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+

  • மீகா 3:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அதனால், வயலைப் போல சீயோன் உழப்படும்.

      எருசலேம் மண்மேடாகும்.+

      ஆலயம் இருக்கிற மலை அடர்ந்த காடாகும்.+

      உங்களால்தான் இந்த நிலைமை வரும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்