-
எரேமியா 25:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 வடக்கிலிருக்கிற எல்லா ஜனங்களையும்+ என் ஊழியனான பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரையும்+ வர வைத்து, இந்தத் தேசத்தையும் இந்த ஜனங்களையும் சுற்றுப்புற தேசங்களில் இருக்கிறவர்களையும் அழித்துவிடுவேன்.”+ யெகோவா சொல்வது இதுதான்: “நான் அவர்களுக்குக் கோரமான முடிவைக் கொண்டுவருவேன். அதைப் பார்க்கிற எல்லாரும் கேலி செய்வார்கள்.*
-
-
எசேக்கியேல் 29:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 “மனிதகுமாரனே, பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார்+ தீருவை எதிர்த்துப் போர் செய்வதற்காகத் தன்னுடைய படைவீரர்களைக் கடுமையாக வேலை வாங்கினான்.+ அதனால், அவர்கள் எல்லாருடைய தலையும் வழுக்கையானது, எல்லாருடைய தோள்பட்டையின் தோலும் உரிந்துபோனது. ஆனால்கூட, தீருவுக்கு எதிராகப் போர் செய்ததற்கான கூலி அவனுக்கோ அவனுடைய படைவீரர்களுக்கோ கிடைக்கவில்லை.
-