17 இது தூதுவர்களின்+ உத்தரவு, பரிசுத்தவான்களின் வேண்டுகோள். உன்னதமான கடவுள்தான் மனிதர்களுடைய ராஜ்யத்துக்கெல்லாம் ராஜா+ என்றும், தனக்கு விருப்பமானவனிடம் ஆட்சியைக் கொடுக்கிறார் என்றும், மிக அற்பமான மனிதனைக்கூட அரசனாக்குகிறார் என்றும் உயிரோடுள்ள எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.