2 அந்தக் கனவுகளைப் பற்றிக் கேட்பதற்காக, மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் சூனியக்காரர்களையும் ஜோதிடர்களையும்* வரவழைக்கும்படி உத்தரவு கொடுத்தான். அவர்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்னால் வந்து நின்றார்கள்.+
7 அதன்படியே, மந்திரவாதிகளும் மாயவித்தைக்காரர்களும் ஜோதிடர்களும்*+ குறிசொல்கிறவர்களும் வந்தார்கள். நான் பார்த்த கனவை அவர்களிடம் சொன்னேன், ஆனால் அவர்களால் அதை விளக்க முடியவில்லை.+