2 யெகோவா எல்லா தேசங்கள்மேலும் பயங்கர கோபமாக இருக்கிறார்.+
அவர்களுடைய எல்லா படைகள்மேலும் கடும் கோபத்தோடு இருக்கிறார்.+
அவர்களைக் கொன்றுபோடுவார்.
அவர்களை அடியோடு அழித்துவிடுவார்.+
3 அவர்களுடைய உடல்கள் சிதறிக்கிடக்கும்.
அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசும்.+
அவர்களுடைய இரத்தம் மலைகளில் ஆறாக ஓடும்.+