27 காட்டிலுள்ள மரங்கள் கனி கொடுக்கும். நிலம் விளைச்சல் தரும்.+ தேசத்தில் அவர்கள் பத்திரமாகக் குடியிருப்பார்கள். அவர்களுடைய கழுத்திலுள்ள நுகத்தடிகளை நான் உடைத்து, அவர்களை அடிமைப்படுத்திய ஆட்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றும்போது நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.+