2 அந்த நாள் வெளிச்சமே இல்லாத நாள்.+
கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொள்ளும் நாள்.+
மலைமேல் படரும் விடியற்கால வெளிச்சத்தைப் போல மங்கலாக இருக்கும் நாள்.
பலம்படைத்த வெட்டுக்கிளிகளின் கூட்டம் வருகிறது.+
அதைப் போன்ற ஒரு கூட்டம் இதற்குமுன் வந்ததில்லை, இனிமேலும் வரப்போவதில்லை.
எத்தனை தலைமுறை வந்தாலும் வரப்போவதில்லை.