47 பின்பு, அவர் என்னை மறுபடியும் ஆலயத்தின் வாசலுக்குக் கொண்டுவந்தார்.+ ஆலயத்தின் முன்பகுதி கிழக்கே பார்த்தபடி இருந்தது. அங்கே வாசலறையின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டு கிழக்கு நோக்கி ஓடுவதை நான் பார்த்தேன்.+ அது ஆலயத்தின் வலது பக்கமாக, அதாவது பலிபீடத்தின் தெற்குப் பக்கமாக, ஓடியது.