31 கிமா நட்சத்திரக் கூட்டத்தை உன்னால் ஒன்றுசேர்த்துக் கட்ட முடியுமா?
கீஸில் நட்சத்திரக் கூட்டத்தின் கட்டை அவிழ்க்க முடியுமா?+
32 ஒரு நட்சத்திரக் கூட்டத்தை அதன் காலத்தில் வரப்பண்ண முடியுமா?
ஆஷ் நட்சத்திரக் கூட்டத்துக்கு வழி காட்ட முடியுமா?
33 வானத்தை இயக்கும் சட்டங்கள்+ உனக்குத் தெரியுமா?
பூமியை அவை இயக்கும்படி செய்ய உன்னால் முடியுமா?