21 பின்பு யெகோவா மோசேயிடம், “வானத்துக்கு நேராக உன் கையை நீட்டு. அப்போது, எகிப்து தேசம் இருட்டாகிவிடும். அந்த இருட்டு படுபயங்கரமாக இருக்கும்” என்றார். 22 உடனடியாக மோசே வானத்துக்கு நேராகத் தன்னுடைய கையை நீட்டினார். அப்போது, எகிப்து தேசம் முழுவதும் மூன்று நாட்களுக்குக் கும்மிருட்டாக ஆனது.+