16 உங்களைச் சுத்தமாக்குங்கள், உங்களைத் தூய்மையாக்குங்கள்.+
என் கண் முன்னாலேயே நீங்கள் அக்கிரமங்கள் செய்தது போதும்.
அதற்கு ஒரு முடிவுகட்டுங்கள்.+
17 நல்லது செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நியாயத்தைத் தேடுங்கள்.+
மற்றவர்களை அடக்கி ஒடுக்குகிறவர்களைத் திருத்துங்கள்.
அப்பா இல்லாத பிள்ளைகளின் உரிமைகளுக்காக வாதாடுங்கள்.
விதவைகளுக்காக வழக்காடுங்கள்.”+