9 சீயோன் மகளே, சந்தோஷத்தில் துள்ளு!
எருசலேம் மகளே, வெற்றி முழக்கம் செய்!
இதோ, உன் ராஜா உன்னிடம் வருகிறார்!+
அவர் நீதியுள்ளவர்; மீட்பு தருகிறவர்.
அவர் தாழ்மையுள்ளவர்;+ அவர் கழுதையின் மேல் ஏறிவருகிறார்.
ஆம், கழுதைக்குட்டியின் மேல் ஏறிவருகிறார்.+
10 எப்பிராயீமிடமிருந்து போர் ரதத்தைப் பறித்துக்கொள்வேன்.
எருசலேமிடமிருந்து குதிரையைப் பிடுங்கிக்கொள்வேன்.
வில்லை எடுத்துக்கொள்வேன்.
அவர் தேசங்களுக்குச் சமாதானத்தை அறிவிப்பார்.+
ஒரு கடலிலிருந்து இன்னொரு கடல் வரைக்கும்,
ஆறு தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர் ஆட்சி செய்வார்.+