16 மேலிருந்து ஓடிவந்த தண்ணீர் அப்படியே நின்றது. ரொம்பத் தூரத்தில், அதாவது சார்தானின் பக்கத்தில் உள்ள ஆதாம் நகரத்தில், அணைபோல் நின்றது. கீழே ஓடிய தண்ணீர் வடிந்துகொண்டே போய் உப்புக் கடல் என்ற அரபா கடலில் கலந்தது. அதனால், ஜனங்கள் எல்லாரும் எரிகோவுக்கு நேரெதிராகக் கடந்துபோனார்கள்.