9 இதோ! யெகோவாவின் நாள் வருகிறது.
அவர் தன்னுடைய ஆக்ரோஷத்தையும் ஆவேசத்தையும் கொட்டப்போகும் நாள் அது.
அப்போது, தேசத்திலுள்ள கெட்டவர்கள் அழிக்கப்படுவார்கள்.
தேசத்துக்குக் கோரமான முடிவு வரும்.+
10 வானத்தில் நட்சத்திரங்கள் மின்னாது.
நட்சத்திரக் கூட்டங்கள்+ ஒளி தராது.
சூரியன் பிரகாசிக்காது.
நிலவு வெளிச்சம் கொடுக்காது.