-
லூக்கா 7:24-28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 யோவான் அனுப்பிய ஆட்கள் திரும்பிப் போன பின்பு, இயேசு அந்தக் கூட்டத்தாரிடம் யோவானைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்; அவர்களிடம், “எதைப் பார்க்க வனாந்தரத்துக்குப் போனீர்கள்? காற்றில் அசைந்தாடும் நாணலையா?+ 25 இல்லையென்றால், வேறு எதைப் பார்க்கப் போனீர்கள்? விலை உயர்ந்த உடை உடுத்திய மனுஷனையா?+ விலை உயர்ந்த உடை உடுத்தி ஆடம்பரமாக வாழ்கிறவர்கள் அரண்மனைகளில்தானே இருக்கிறார்கள்! 26 இல்லையென்றால், வேறு யாரைப் பார்க்கப் போனீர்கள்? ஒரு தீர்க்கதரிசியைப் பார்ப்பதற்காகவா? ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு தீர்க்கதரிசியைவிட மேலானவரைப் பார்க்கவே போனீர்கள்.+ 27 ‘இதோ! நான் என்னுடைய தூதுவரை உனக்கு முன்னால் அனுப்புகிறேன். அவர் உனக்கு முன்னால் போய் உன் பாதையைத் தயார்படுத்துவார்’ என்று இவரைப் பற்றித்தான் எழுதப்பட்டிருக்கிறது.+ 28 நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷராகப் பிறந்தவர்களில் யோவானைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை; ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தில் தாழ்ந்தவராக இருக்கிறவர் அவரைவிட உயர்ந்தவராக இருக்கிறார்”+ என்று சொன்னார்.
-