-
மத்தேயு 6:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 பின்பு அவர், “மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக+ அவர்கள் முன்னால் நீதியான செயல்களைச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால், உங்கள் பரலோகத் தகப்பனிடமிருந்து உங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. 2 அதனால், நீங்கள் தானதர்மம்* செய்யும்போது வெளிவேஷக்காரர்களைப் போலத் தம்பட்டம் அடிக்காதீர்கள்.* மற்றவர்கள் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காக ஜெபக்கூடங்களிலும் தெருக்களிலும் அவர்கள் தம்பட்டம் அடிக்கிறார்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது.
-