உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மாற்கு 12:38, 39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 அவர் தொடர்ந்து கற்பித்தபோது, “வேத அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் நீளமான அங்கிகளைப் போட்டுக்கொண்டு திரிய விரும்புகிறார்கள்; சந்தைகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறார்கள்.+ 39 அதோடு, ஜெபக்கூடங்களில் முன்வரிசை* இருக்கைகளிலும் விருந்துகளில் மிக முக்கியமான இடங்களிலும் உட்கார விரும்புகிறார்கள்.+

  • லூக்கா 11:43
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 43 பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், ஜெபக்கூடங்களில் முன்வரிசை* இருக்கைகளில் உட்கார வேண்டுமென்றும், சந்தைகளில் மக்கள் உங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும் ஆசைப்படுகிறீர்கள்.+

  • லூக்கா 14:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் மிக முக்கியமான இடங்களைத் தேர்ந்தெடுப்பதை+ அவர் கவனித்தபோது அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்;

  • லூக்கா 14:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதனால் நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால், கடைசி இடத்தில் போய் உட்காருங்கள்; உங்களை அழைத்தவர் வந்து, ‘நண்பரே, முன்னால் வந்து உட்காருங்கள்’ என்று சொல்வார். அப்போது, மற்ற விருந்தினர்கள்முன் உங்களுக்குக் கெளரவமாக இருக்கும்.+

  • லூக்கா 20:46
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 46 “வேத அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் நீளமான அங்கிகளைப் போட்டுக்கொண்டு திரிய விரும்புகிறார்கள், சந்தைகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஜெபக்கூடங்களில் முன்வரிசை* இருக்கைகளிலும் விருந்துகளில் மிக முக்கியமான இடங்களிலும் உட்கார விரும்புகிறார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்