உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 4:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அதனால் நீ புறப்பட்டுப் போ. நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன், நீ என்ன பேச வேண்டும் என்பதை நான் சொல்லிக்கொடுப்பேன்”+ என்றார்.

  • மத்தேயு 10:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ஆனாலும், அவர்கள் உங்களை அதிகாரிகள்முன் நிறுத்தும்போது, எப்படிப் பேசுவது என்றோ என்ன பேசுவது என்றோ கவலைப்படாதீர்கள். நீங்கள் என்ன பேச வேண்டுமோ அது அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.+ 20 அப்போது நீங்களாகவே பேச மாட்டீர்கள், உங்கள் பரலோகத் தகப்பனுடைய சக்தி உங்களைப் பேச வைக்கும்.+

  • லூக்கா 12:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பொதுக் கூட்டங்களுக்கு* முன்பாகவும் அரசாங்க அதிகாரிகள், தலைவர்கள் முன்பாகவும் அவர்கள் உங்களைக் கொண்டுபோய் நிறுத்தும்போது எப்படிப் பதில் சொல்வோம், என்ன பதில் சொல்வோம், எதைப் பேசுவோம் என்று நினைத்துக் கவலைப்படாதீர்கள்.+ 12 ஏனென்றால், நீங்கள் பேச வேண்டியதையெல்லாம் அந்த நேரத்தில் கடவுளுடைய சக்தி உங்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்”+ என்றார்.

  • லூக்கா 21:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதனால், எப்படிப் பதில் சொல்வதென்று முன்கூட்டியே உங்கள் உள்ளத்தில் ஒத்திகை பார்க்க வேண்டாம்.+ 15 உங்கள் எதிரிகள் எல்லாரும் திரண்டு வந்தாலும் உங்களை எதிர்த்து நிற்கவோ எதிர்த்துப் பேசவோ முடியாதபடி நான் உங்களுக்கு வார்த்தைகளையும் ஞானத்தையும் அருளுவேன்.+

  • அப்போஸ்தலர் 4:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அப்போது பேதுரு கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டு,+

      “மக்களை ஆளுகிறவர்களே, பெரியோர்களே,

  • அப்போஸ்தலர் 6:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 இருந்தாலும், ‘விடுதலை பெற்றவர்களின் ஜெபக்கூடம்’ என்ற பிரிவைச் சேர்ந்த ஆட்களில் சிலர், சிரேனே, அலெக்சந்திரியா, சிலிசியா, ஆசியா ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலரோடு வந்து ஸ்தேவானோடு வாக்குவாதம் செய்தார்கள். 10 ஆனால், ஞானத்தாலும் கடவுளுடைய சக்தியாலும் பேசிய அவரை அவர்களால் ஜெயிக்க முடியவில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்