21 அதற்கு இயேசு, “நீ குறையில்லாதவனாக இருக்க விரும்பினால், போய் உன் சொத்துகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, என்னைப் பின்பற்றி வா;+ அப்போது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் சேரும்”+ என்று சொன்னார்.
22 இயேசு இதைக் கேட்டபோது, “நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது: நீ போய் உன்னிடம் இருப்பதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, என்னைப் பின்பற்றி வா. அப்போது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் சேரும்”+ என்று சொன்னார்.
34 சொல்லப்போனால், அவர்கள் எல்லாருடைய தேவையும் பூர்த்தி செய்யப்பட்டது;+ நிலங்களையோ வீடுகளையோ வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து, 35 அப்போஸ்தலர்களிடம் கொடுத்தார்கள்.+ அது அவரவர் தேவைக்கு ஏற்றபடி எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.+