3 பின்பு, அங்கிருந்து புறப்பட்டு தமஸ்குவை நெருங்கிக்கொண்டிருந்தான்; அப்போது, திடீரென்று வானத்திலிருந்து ஓர் ஒளி தோன்றி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது.+ 4 அவன் தரையில் விழுந்தான்; அப்போது, “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்று தன்னோடு பேசுகிற ஒரு குரலைக் கேட்டான்.