11 கடவுளை வணங்குவதற்காக நான் எருசலேமுக்குப் போய் 12 நாட்கள்கூட ஆகவில்லை.+ இதை நீங்களே விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம். 12 ஆலயத்தில் நான் யாருடனாவது வாக்குவாதம் செய்ததையோ, ஜெபக்கூடங்களிலும் சரி, நகரத்தின் வேறெந்தப் பகுதியிலும் சரி, கலகம் செய்ய மக்களைத் தூண்டிவிட்டதையோ இவர்கள் பார்க்கவில்லை.