7 எந்த விதத்தில் எங்களுடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டுமென்று உங்களுக்கே தெரியும்;+ உங்கள் மத்தியில் நாங்கள் ஒழுங்கீனமாக நடக்கவில்லை. 8 அதோடு, யாரிடமும் இலவசமாக சாப்பிடவில்லை;+ உங்களில் யாருக்கும் அதிக பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக இரவும் பகலும் பாடுபட்டு வேலை செய்தோம்.+