3 அவரை பவுல் தன்னோடு கூட்டிக்கொண்டு போக விரும்புவதாகச் சொன்னார். ஆனால், அந்த இடங்களில் வாழ்கிற யூதர்களை மனதில் வைத்து அவருக்கு விருத்தசேதனம் செய்தார்.+ ஏனென்றால், தீமோத்தேயுவின் அப்பா ஒரு கிரேக்கர் என்பது அவர்கள் எல்லாருக்கும் தெரிந்திருந்தது.
18 பவுல் அங்கே பல நாட்கள் தங்கிய பின்பு சகோதரர்களிடமிருந்து விடைபெற்று, பிரிஸ்கில்லாளுடனும் ஆக்கில்லாவுடனும் சீரியாவுக்குக் கப்பல் ஏறினார். நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அவர் கெங்கிரேயாவில்+ தலைமுடியை ஒட்ட வெட்டிக்கொண்டார்.