-
எபேசியர் 3:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அந்த ரகசியம் அவருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் இப்போது கடவுளுடைய சக்தியால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற அளவுக்கு, கடந்த தலைமுறையைச் சேர்ந்த யாருக்கும் வெளிப்படுத்தப்படவில்லை.+ 6 நல்ல செய்தியைக் கேட்பதன் மூலமும் கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபடுவதன் மூலமும் மற்ற தேசத்து மக்கள் அவருடைய சக வாரிசுகளாகவும், ஒரே உடலின் உறுப்புகளாகவும்,+ கடவுளுடைய வாக்குறுதியில் நம்மோடு பங்குள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்பதுதான் அந்த ரகசியம்.
-
-
கொலோசெயர் 2:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அவர்களுடைய இதயங்களுக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும்+ என்றும், அவர்கள் எல்லாரும் அன்பினால் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும்+ என்றும் ஆசைப்படுகிறேன். அப்போதுதான், அவர்கள் எல்லாருக்கும் ஒப்பற்ற ஆசீர்வாதம் கிடைக்கும், அதாவது சத்தியத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டோம் என்ற முழு நம்பிக்கை கிடைக்கும்; அதோடு, கடவுளுடைய பரிசுத்த ரகசியமாகிய கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவு கிடைக்கும்.+
-