-
ரோமர் 16:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 கடவுளால் உங்களைப் பலப்படுத்த முடியும் என்பதை நான் அறிவிக்கிற நல்ல செய்தியும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கிக்கப்படுகிற செய்தியும் காட்டுகின்றன. அந்த நல்ல செய்தி, நீண்ட காலம் மறைபொருளாக வைக்கப்பட்டு இப்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கிற பரிசுத்த ரகசியத்தோடு+ ஒத்திருக்கிறது. 26 தீர்க்கதரிசனப் புத்தகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த ரகசியம், எல்லா தேசத்து மக்களுக்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது. என்றென்றும் இருக்கிற கடவுளின் கட்டளைப்படி அவர்கள் விசுவாசித்துக் கீழ்ப்படிவதற்காக அவர்கள் மத்தியில் அறிவிக்கப்பட்டு வருகிறது.
-
-
எபேசியர் 3:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 பரிசுத்தவான்கள் எல்லாரிலும் நான் மிக மிக அற்பமானவனாக இருந்தாலும்,+ கிறிஸ்துவிடமிருந்து வரும் எல்லையில்லாத ஆசீர்வாதங்களைப் பற்றிய நல்ல செய்தியை மற்ற தேசத்து மக்களுக்கு அறிவிப்பதற்காகக் கடவுள் தன்னுடைய அளவற்ற கருணையை எனக்குத் தந்தார்.+ 9 அதோடு, எல்லாவற்றையும் படைத்த கடவுளால்* பல காலமாக மறைக்கப்பட்டிருந்த பரிசுத்த ரகசியம்+ எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பதை எல்லாருக்குமே புரிய வைப்பதற்காகவும் அவர் தன்னுடைய அளவற்ற கருணையை எனக்குத் தந்தார்.
-