16 பவுல் தெர்பைக்கும் பின்பு லீஸ்திராவுக்கும் வந்துசேர்ந்தார்.+ அங்கே தீமோத்தேயு என்ற ஒரு சீஷர் இருந்தார்.+ அவருடைய அம்மா இயேசுவைப் பின்பற்றிய ஒரு யூதப் பெண், ஆனால் அப்பா ஒரு கிரேக்கர். 2 லீஸ்திராவிலும் இக்கோனியாவிலும் இருந்த சகோதரர்கள் தீமோத்தேயுவைப் பற்றி உயர்வாகப் பேசினார்கள்.