-
எபிரெயர் 5:12-14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 இதற்குள்* நீங்கள் போதகர்களாகியிருக்க வேண்டும். ஆனால், கடவுளுடைய பரிசுத்த வார்த்தைகளில் இருக்கிற அடிப்படை விஷயங்களை+ ஆரம்பத்திலிருந்து மறுபடியும் சொல்லிக்கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். திட உணவு சாப்பிடுகிறவர்களாக அல்ல, திரும்பவும் பால் குடிக்கிறவர்களாகவே ஆகியிருக்கிறீர்கள். 13 பாலையே குடித்துக்கொண்டிருக்கிற எல்லாரும் குழந்தைகள் என்பதால், கடவுளுடைய நீதியான வார்த்தையைப் பற்றித் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.+ 14 திட உணவோ முதிர்ச்சியுள்ளவர்களுக்கே உரியது; சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவித்திருக்கிற ஆட்களுக்கே உரியது.
-