29 ஆனால், சோதோம் நகரத்தைவிட்டு லோத்து வெளியே போன நாளில் வானத்திலிருந்து நெருப்பும் கந்தகமும் பெய்து அவர்கள் எல்லாரையும் அழித்துப்போட்டது.+30 மனிதகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.+
7 ஆனால், இப்போது உபத்திரவப்படுகிற உங்களுக்கு, நம் எஜமானாகிய இயேசு ஜுவாலித்து எரிகிற நெருப்புடன் தன்னுடைய வல்லமைமிக்க தேவதூதர்களோடு பரலோகத்திலிருந்து வெளிப்படும்போது,+ எங்களோடு உங்களுக்கும் விடுதலை கொடுப்பார்.+
7 இப்படிச் சோதனைகளால் சோதிக்கப்பட்ட* உங்கள் விசுவாசம்+ தங்கத்தைவிட மதிப்புள்ளது. ஏனென்றால், நெருப்பில் சோதிக்கப்படுகிற தங்கம்கூட அழிந்துபோகும். உங்கள் விசுவாசமோ இயேசு கிறிஸ்து வெளிப்படும் சமயத்தில் உங்களுக்குப் புகழையும் மகிமையையும் மதிப்பையும் சேர்க்கும்.+