-
அப்போஸ்தலர் 18:26-28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 ஜெபக்கூடத்திலும் அவர் தைரியமாகப் பேச ஆரம்பித்தார். அவர் பேசியதை பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும்+ கேட்டபோது, அவரைத் தங்களோடு கூட்டிக்கொண்டுபோய், கடவுளுடைய வழிகளைப் பற்றி இன்னும் திருத்தமாக அவருக்கு விளக்கினார்கள். 27 அவர் அகாயாவுக்குப் போக விரும்பியதால், அவரை அன்போடு வரவேற்கும்படி அங்கிருந்த சீஷர்களுக்கு எபேசுவிலிருந்த சகோதரர்கள் கடிதம் எழுதினார்கள்; அவர் அங்கே போனபோது, கடவுளுடைய அளவற்ற கருணையால் சீஷர்களானவர்களுக்கு அதிக உதவியாக இருந்தார். 28 எப்படியென்றால், இயேசுவே கிறிஸ்து என்று வேதவசனங்களிலிருந்து எடுத்துக் காட்டி,+ யூதர்களுடைய போதனைகள் தவறென்று முழுமையாகவும் வெளிப்படையாகவும் மிகத் தீவிரமாகவும் நிரூபித்துவந்தார்.
-