10 இதையெல்லாம் தூரத்தில் இருக்கும்போதே எழுதுகிறேன். ஏனென்றால், நான் உங்களிடம் வரும்போது, நம் எஜமான் தந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடம் கடுமையாக நடந்துகொள்ள விரும்பவில்லை.+ உங்களை நொறுக்கிப்போடுவதற்கு அல்ல, பலப்படுத்துவதற்காகத்தான் அவர் எனக்கு அந்த அதிகாரத்தைத் தந்திருக்கிறார்.