18 அவர்கள் வந்துசேர்ந்ததும் அவர்களிடம், “நான் ஆசிய மாகாணத்துக்கு+ வந்து உங்களோடிருந்த நாள்முதல் எப்படி நடந்துகொண்டேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். 19 யூதர்களுடைய சதித்திட்டங்களால் ஏற்பட்ட சோதனைகளின்போது நான் மிகுந்த மனத்தாழ்மையோடும்+ கண்ணீரோடும் எஜமானுக்கு ஊழியம் செய்தேன்.